கொஞ்சம் பொறு ===================================================ருத்ரா ஓ!சூரியனே! கொஞ்சம் பொறு. உன்னில் முகம் கழுவிக்கொள்கிறேன். இரவின் மரங்கொத்திப்பறவைகள் செய்த காயங்களுக்கு உன் டெட்டால் கொண்டு கழுவிக்கொள்கிறேன். அந்த "உழைப்பாளர் சிலை அருகே நில் வந்து விடுகிறேன்" என்றாள் அந்த பெரும்பாறையும் கடப்பாரையும் நரம்பு புடைத்த அந்த கரங்களும் என்னை நசுக்கிக்கொண்டே இருந்தது தான் மிச்சம். கொஞ்ச நேரத்தில் கொஞ்சி கொஞ்சி கிணு கிணுவென்று "செல்லு"வாள் "சாரிடா" என்று. காதலுக்கு கண்ணுமில்லை. முகமும் இல்லை. எந்த முகத்தை உன்னிடம் கழுவிக்கொள்ள? உன் ஆரஞ்சு லாவாவில் அவள் ஆப்பிள் கன்னங்களை வார்ப்பு செய்யவே இன்னும் ஆசை. விடியல் எனும் கோடி கோடி பக்கங்கள் உள்ள நாவலை ஒவ்வொரு பக்கமாய்த்தான் தினமும் எழுதுகிறாய். என் பக்கம் இன்னும் உன்னிடம் விடியவில்லை. இன்று மீண்டும் அந்த இ.சி.ஆர் ரோடில் கடல் அலை உமிழும் நுரைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கச்சொல்வாள். ஒரு நாள் கிழக்கு என்பதே திசை மாறும் அப்போது இந்தக்காதலின் மலைப்பாம்பு போன்ற நீண்ட குகையின் மறுமுனை தெரியும். தெரிந்து என்ன செய்வது? இந்த பஞ்சு மிட்டாய்க்கூழாகி வாழ்க்கை எனும் அர்த்தத்தின் விலா எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போய் இருக்கும். உன் தீயில் தெரியும் அந்த சோப்புக்குமிழிகளை பிடிக்கவே எனக்கு இன்னும் அந்த ஆசை. ====================================================================
Monday, September 28, 2015
கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு ===================================================ருத்ரா ஓ!சூரியனே! கொஞ்சம் பொறு. உன்னில் முகம் கழுவிக்கொள்கிறேன். இரவின் மரங்கொத்திப்பறவைகள் செய்த காயங்களுக்கு உன் டெட்டால் கொண்டு கழுவிக்கொள்கிறேன். அந்த "உழைப்பாளர் சிலை அருகே நில் வந்து விடுகிறேன்" என்றாள் அந்த பெரும்பாறையும் கடப்பாரையும் நரம்பு புடைத்த அந்த கரங்களும் என்னை நசுக்கிக்கொண்டே இருந்தது தான் மிச்சம். கொஞ்ச நேரத்தில் கொஞ்சி கொஞ்சி கிணு கிணுவென்று "செல்லு"வாள் "சாரிடா" என்று. காதலுக்கு கண்ணுமில்லை. முகமும் இல்லை. எந்த முகத்தை உன்னிடம் கழுவிக்கொள்ள? உன் ஆரஞ்சு லாவாவில் அவள் ஆப்பிள் கன்னங்களை வார்ப்பு செய்யவே இன்னும் ஆசை. விடியல் எனும் கோடி கோடி பக்கங்கள் உள்ள நாவலை ஒவ்வொரு பக்கமாய்த்தான் தினமும் எழுதுகிறாய். என் பக்கம் இன்னும் உன்னிடம் விடியவில்லை. இன்று மீண்டும் அந்த இ.சி.ஆர் ரோடில் கடல் அலை உமிழும் நுரைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கச்சொல்வாள். ஒரு நாள் கிழக்கு என்பதே திசை மாறும் அப்போது இந்தக்காதலின் மலைப்பாம்பு போன்ற நீண்ட குகையின் மறுமுனை தெரியும். தெரிந்து என்ன செய்வது? இந்த பஞ்சு மிட்டாய்க்கூழாகி வாழ்க்கை எனும் அர்த்தத்தின் விலா எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போய் இருக்கும். உன் தீயில் தெரியும் அந்த சோப்புக்குமிழிகளை பிடிக்கவே எனக்கு இன்னும் அந்த ஆசை. ====================================================================
Saturday, September 26, 2015
தமிழுக்கும் அமுதென்று பேர் !
தமிழுக்கும் அமுதென்று பேர் !
============================================ருத்ரா இ.பரமசிவன்
நிழல் குளிக்கும் கனவுகள் !
பின்னணியில்
நீலச்சதை பிதுங்கி
இந்த கீற்றுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட ஆர்வங்கொண்டு
சிலு சிலுக்கிறது.
இளநீர்க்குலைகள் ஒவ்வொன்றும்
தென்னையின் சொப்பனங்கள் .
மனிதனின் தாகம் தீர்க்க
அரிவாளால் சிரச்சேதம் செய்யப்பட
காத்திருக்கிறது.
யாரைக்கே ட்டார்கள் ?
எதைக்கேட்டார்கள்?
இந்த மண்ணையா?
அந்த மட்டைகளையா?
அதுவும்
இலங்கையின் தென்னைமரங்களின்
இளநீர் அவ்வளவும்
தமிழனின் ரத்தம்.
காற்று இடைவெளியிலும்
நஞ்சு ஊற்றும்
சிங்கள இனவெறி தான்.
பூமியின் அடியின் வேர்த்தூவிகள்
அத்தனையும்
தமிழின் உதிரம் குடி த்தவை.
மிச்சமான எலும்பு மஜ்ஜைக்குள்ளும்
விடுதலையின் தாக உறுமல்கள்
கேட்கின்றனவோ!
தென்னை மரம் எங்கிருந்தால் என்ன?
தலை விரிகோலமாக அதன் கூந்தல்கள்
சிலிர்ப்பது
ஒற்றைச்சிலம்பு ஆதாரம் கொண்டு நிற்கும்
ஒரு சீற்றத்தின் உருவகமாக தெரிகிறது.
உலகத்து மண்ணின்
அடிக்குழம்பு
லாவாவில் இருந்து அல்லவா
தமிழின் "அகர முதல "ஒலிக்கிறது!
ஐநா மன்றத்தின்
செவிட்டு சன்னல்களையும் தாண்டி
இது எதிரொலித்தே தீரும்!
இருப்பினும் இந்த
இளநீரின் கண்ணீரும்
இனிக்கத்தான் செய்கின்றது !
ஏனெனில்
தமிழுக்கும் அமுதென்று தானே பேர் !
============================================
Wednesday, September 23, 2015
ஊமைச்சுருதிகள்
ஊமைச்சுருதிகள்
==================================================================
ருத்ரா இ.பரமசிவன்
இலங்கை
என்றால் தென்னைகள்
தென்னைகள்
என்றால் கீற்றுகள் .
கீற்றுகள் என்றால் இங்கே
தமிழ் உயிர்களுக்கு மரண பந்தல் வேய்வதற்கா
தலையாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
யாழ்நகரம்
தமிழனின் எலும்புக்கூடுகளால் நிரம்பிக்கிடக்கிறது
என்பதன்
கார்ட்டூன் சித்திரங்கள் தானே
இந்த தென்னங்கீற்றுகள் !
ஓ !உலக மானிடர்களே
மலட்டு வானமாய் நீலப்பின்னணி இங்கு
ஒரு
ஊமைச்சுருதி கூட்டிக்கொண்டிருந்தாலும்
செங்குருவிகளின்
ஒரு செங்கீதம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது
விண்டது அண்டம்
விண்டது அண்டம்
====================================================
ருத்ரா இ.பரமசிவன்
மனசு மனசையே
கொத்துக்கறி போடும்போது
இந்த பச்சையும் நீலமும்
ஒத்தடம் கொடுப்பது எவ்வளவு சுகம்.
சினம் எனும்
எரிமலைகுழம்பையே
தினம் மடியில் கட்டிக்கொண்டு
என்னத்தைக்கண்டாய்?
பீச்சியடிக்கும்
வெள்ளிப்பளிங்கு நீர்ப்புகை
ஏதோ ஒரு மாயப்பறவையின்
தூவி கொண்டு வருடுவது போல்
அல்லவா இனிக்கிறது!
வயதுகள் கட்டும் கட்டங்களுக்குள்
மனிதனின் மகிழ்ச்சி
கூடு கட்டிக் கொள்கிறது.
அந்த விடலைப்பையனுக்கு
அவன் நண்பியின் சம்கின் துப்பட்டா
அந்த நீர்த்தூவி.
அந்த நீல முகடுகள்
ஒரு நடுவயதுக்காரனுக்கு
சௌகரியமாய் சாய்ந்து கொள்ளும்
பட்டுத்திண்டுகள்.
அந்த பச்சைக்கம்பள விரிப்பு
எப்போது பார்த்தாலும்
எப்படிப்பார்த்தாலும்
ஒரு தாயின் பாசம் கொழித்த மடி.
பிக்காஸோ
தூரிகை எடுத்துக்கொண்டு
அவசரமாய் வருவார்!
என்ன ஆபாசம் இது?
ஊனக்கண் தாண்டி ஊறும் காட்சியை
யார் இப்படி
பச்சையாய் நீலமாய்
சாணி மெழுகியது?
எல்லாம் பூசி மெழுகி
இங்கும் அங்கும்
கோடுகள் வளைவுகள் தீற்றி
நம்மைக்கூர்ந்து தாக்கும்
ஒரு வண்ணம் அப்பித்தருவார்.
பூமிப்பெண் புருவம் வளைத்து
கன்னிமை சிதைய
அந்த நீலத்துணி விரிப்பில்
கன்னிக்குடம் உடைத்து
பிரளயமாய் இந்த அண்டத்தையே
விண்டு தருவதை காட்டியிருப்பார்.
நாமும்
வாய் பிளந்து நின்றிருப்போம்!
=========================================================
Tuesday, September 22, 2015
தேடுகிறேன்
தேடுகிறேன்
================================================ருத்ரா இ.பரமசிவன்
என் சுவாசத்தை தேடுகிறேன்.
இது நுரையீரல் தாண்டிய மூச்சு.
எல்லாவற்றிலும் ஒற்றி ஒற்றி எடுத்து
தேடிப்பார்க்கிறேன்.
அழுகிய பிணங்களில் கூட
"வாசுதேவன்"கன்னங்குழியச்சிரிக்கிறான்.
கசாப்புக்கடைகளில்
தோலுரித்து தொங்கிக்கொண்டிருப்பவைகளில் கூட
உலகமே விழியாய் கண்ணீர்த்துளிர்க்கும்
கல்வாரி சித்திரங்களைக்காண்கிறேன்.
அகலமான அந்த வட்ட மரக்கட்டையில்
சதைத்துணுக்குகள் கத்தியின் சிற்பமாய்
மனிதப்பசியின் தீகொழுந்துகளில்
நெளிந்து கொண்டிருக்கும் இடுக்குகளில் கூட
என் சுவாசத்தை தேடுகிறேன்.
டால்ஃபின் எனும் கடல் சுவடிகளில்
அதன் அல்காரிதம்களின்
கண்ணுக்கு தெரியாத ஒரு பாஸ்வர்ட்
அதன் செதில்களில் சிக்கிக்கொண்டிருப்பதை
நான் தேடுகிறேன்.
வினாடியை பில்லியன் துண்டுகளாக்கி
எந்த துண்டில் அது
கடலில் பத்து பன்னிரெண்டு ரிக்டர் ஸ்கேலாக்கி
கொப்பளித்து
லட்சக்கணக்கான மக்களை விழுங்க
காத்திருக்கிறதோ
அந்த மூச்சுக்குமிழியை தேடுகின்றேன்.
அதோ அந்த புல்லாங்குழல்
பல்லாயிரக்கணக்கான
ஜன்ய ராகங்களில்
அல்லது மேள கர்த்தா ராகங்களில்
எந்த "புன்னாக வராளியின்"
அடையாளம் மாறிப்போன ஒரு புன்னாக வராளியில்
இந்த உலகத்தின் மேக்னாக்குழம்பை
வெற்றிலை குதுப்பி உமிழப்போகிறதோ?
ஆம்! அதைத்தான் தேடுகிறேன்.
அது என் மூச்சுச்சுவட்டில் இடறும் வரை
இங்கே எனக்கு எல்லாமும் கடவுள்களே!
அது வளையல் பூச்சியாய் இருந்தாலும்
பரவாயில்லை.
அதனோடு வளைந்து வளைந்து
வலம் வருவேன்.
கடலின் திவலைகள் வைர நெக்லஸ் பூட்டி
ஒவ்வொரு தருணங்களையும்
அழகு படுத்துவதை
அணு அணுவாய் ரசித்துக்கொண்டே
அந்த அணு வெடிப்பை தேடுகின்றேன்.
===================================================
வானத்துண்டுகள்
வானத்துண்டுகள்
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்
வான நீலத்தையும்
ஒரு இருட்டுக்கடை
அல்வாத்துண்டுகளாய்
போட்டிருக்கிறார்ளே!
அந்த நீலவண்ணத்துக்கும்
எவ்வளவு இனிப்பு!
இது
சிலருக்கு குழலூதும் கண்ணன்.
சிலருக்கு
மயில் வாகனத்தின்
"மயில் கழுத்து".
"மயில் கழுத்து காஞ்சி புரத்தில்"
கழுத்து சுளுக்க நடைபோடுபவர்களுக்கு
என்னவோ
கிளிமஞ்சாரோ சிகரத்திலேயே
நடக்கும் மிடுக்கு இது.
நீலக்கடலை சில்லு போட்டு
தட்டில் ஏந்தி நீட்டுவது யார்?
அவள் அன்று இந்த டிசைனில்
உடுத்து வந்து என்னை
சுருட்டிக்கொண்டு போனவள்
இன்னும்
என்னை
என்னிடம் தரவே இல்லையே!
அவளையும் காணோம்!
அந்த புடவையையும் காணோம்.
கடைவாசலில் அலங்காரமாய்
வேதாளங்கள் போல் தொங்கும்
அந்த குவியலிடையே
நடையாய் நடந்து நானும் தேடுகிறேன்.
என்னில் அவளை!
அவளில் என்னை!
=============================================================
பொறிகள்
பொறிகள்
=========================================================ருத்ரா
ஒவ்வொரு வருடமும்
சிவகாசியின் அடிவயிற்றுப் பொறிகளே
நம் தீபாவளிகள்.
தீபாவளிக்கு துணியெடுக்க
கொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்
மொத்த குடும்பமும் "கரி"
வதம் செய்யப்பட்ட நரகாசுரன்கள்
எப்படி
வாக்குப்பெட்டிக்குள் குவிந்தார்கள்?
சீனாவுக்கும் கூட
நரகாசுரன்கள் எல்லாம் ரூபாயில்
சூடாய் வியாபாரம் ஆகும்.
லெஷ்மி(க்கு) வெடி வைத்துவிட்டு
லெஷ்மியை வீட்டுக்குள் கூப்பிடுவதே
அர்த்தமுள்ள இந்து மதம்.
இலங்கையில் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவும் பாராட்டியது.
தென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்!
இளைய யுகத்துக்கு
"கருப்பு வெள்ளை" "கபாலிகளே"
வர்ண வர்ண விடியல்கள்.
இந்து மதத்தை
தலைகீழாய் நட்டுவைத்தால்
அதுவே "இந்துத்வா"
மூஞ்சுறுகளின் மீசை மயிர்களுக்கும்
தங்க முலாம் தான்.
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்.
யார் அங்கே? இந்த இந்தியாவையே
சுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.
"நூத்துப்பத்து விதி"
_________________________________________________________________
Subscribe to:
Posts (Atom)



